Close
ஜனவரி 28, 2025 10:11 மணி

துவரை சாகுபடியில் பயிர் வேளாண்மை பயிற்சி, ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்

வேளாண்மை துறை சார்பில் நடைபெற்ற பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் துவரை சாகுபடியில் பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டம் ,வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கிராம அளவில் பண்ணை பள்ளி பயிற்சி நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் நடைபெற்றது.

இம் முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் முத்துராம் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர்கள் ஷோபனா, சத்திய நாராயணன் ஆகியோர் மேற்பார்வையில் அட்மா திட்டத்தின் கீழ் வரப்பெற்றுள்ள முதல் தவணையில் விவசாயிகள் தொடர்புடைய துவரை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் பண்ணை பள்ளி பயிற்சி முதல் வகுப்பு நடத்தப்பட்டது.

இந்த வகுப்பில் துவரை ரகங்கள் பருவம் மற்றும் விதை அளவு, விதை நேர்த்தி போன்ற அனைத்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் வேளாண்மை துணை இயக்குனர் வடமலை கலந்து கொண்டு துவரை சாகுபடியில் நிலத்தை புழுதி ஓட்டி உரமிடுவது, விதை விதைப்பது, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள், இடுவது விதை நேர்த்தி செய்வதன் மூலம் இளம் பயிர்களில் வரும் நோயினை கண்டறிதல் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்து பேசினார்.

வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர் பாலமுருகன் பேசுகையில் உயிர் உரம் உயிரியல் கட்டுப்பாடு, காரணிகள் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்வது, இதனால் ஏற்படும் பயிர்களின் எண்ணிக்கை பராமரிக்கப்படுவதோடு இளம் பயிரில் ஏற்படும் நோய் தாக்கத்திலிருந்து சாகுபடி பயிர்களை காத்துக் கொள்ளலாம் என எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் உதவி தொழில் நுட்ப மேலாளர் சத்தியநாராயணன் ,அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள், உதவி தொழில் நுட்ப மேலாளர் சுகன்யா மண் மாதிரி சேகரிப்பது குறித்தான வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்து பேசினர்.

நிகழ்ச்சியில் வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் ,வேளாண்மை துறை அலுவலர்கள் ,விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top