Close
நவம்பர் 21, 2024 6:26 காலை

உசிலம்பட்டியில் தேர்தலில் வாக்களிப்பதன் கடமை குறித்த விழிப்புணர்வு பேரணி

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதியை அடிப்படையாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு புதிதாக சேர்த்தல், திருத்துதல், நீக்குதல் ஆகியவற்றுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
அந்த வகையில் 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி புதிய பட்டியலை வெளியிடுவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கோட்ட வருவாய்த்துறை மற்றும் டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் இணைந்து தேர்தல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கான சிறப்பு முகாம் மற்றும் வாக்களிப்பதன் கடமை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


உசிலம்பட்டி டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உசிலம்பட்டி கோட்டாட்சியர் ரவிசந்திரன் கொடி அசைத்து துவங்கி வைத்தார். இந்த பேரணி உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவுற்றது.
இப்பேரணியில், உசிலம்பட்டி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், தேர்தல் பிரிவு துணை வாட்டாச்சியர் முத்துலட்சுமி, வருவாய் ஆய்வாளர் மணிரத்தினம், கிராம நிர்வாக அலுவலர் சக்திகுமார் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் மார்கிரேட் கிரேசியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top