Close
நவம்பர் 21, 2024 6:20 காலை

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம்: கு. தியாகராஜன் கோரிக்கை

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு. தியாகராஜன்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அ ருகே  மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  ஆசிரியை ரமணி என்பவர் இன்று காலை பள்ளி வளாகத்தில் மதன்குமார் என்ற இளைஞரால் குத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார். ஆசிரியையை கத்தியால் கு்த்திய இளைஞர் மதன்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்து உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையி்ல் கூறப்பட்டு இருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி
வளாகத்தில் தற்காலிக ஆசிரியை ரமணி அவர்களை கத்தியால் குத்தி படுகொலை செய்த காட்டுமிராண்டிக்கு விரைவில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். பள்ளி வளாகம் என்பது மிகவும் புனிதமானது அதில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மாணவர்கள் மனநிலையை முற்றிலும் பாதிக்கும்..

அரசு அனைத்து பள்ளிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். விரைவில் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவரும் பணி பாதுகாப்பு சட்டத்தினை ஆசிரியர்களுக்கு விரைவில் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர்  அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top