திருவண்ணாமலை பச்சையம்மன் கோயில் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதி அண்ணாமலை என்று சொல்லப்படும் நெருப்பு மலை அடிவாரத்தில் புள்ளிமான், மயில், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
பச்சையம்மன் கோவில் அருகே 2 குளங்கள் உள்ளதால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இவ்வாறு குடிநீர் தேடி பச்சையம்மன் கோயில் அருகே உள்ள பகுதிகளுக்குள் நுழைந்த புள்ளிமான் ஒன்று தெரு நாய்களால் கடித்து குதறி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியது.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததும் விரைந்து சென்று படுகாயம் அடைந்த மானை மீட்டனர். எனினும் மான் பரிதாபமாக உயிரிழந்தது.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வனத்துறையினர் தண்ணீர் தொட்டியை அங்கங்கே அமைக்க வேண்டும். மான்கள் தொடர்ந்து குடிநீர் தேடி இறப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது பொதுமகக்களின் கோரிக்கையாக உள்ளது.