திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றிய அலுவலகத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அபிராமி அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி கலந்து கொண்டு தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்யாறு அடுத்த கீழ் புதுப்பாக்கம் அங்கன்வாடி மையத்திலும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை எம்எல்ஏ வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுப்பிரமணியன் , ஒன்றிய குழு தலைவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி மைய ஆசிரியர்கள், கலந்து கொண்டனர்.
வெம்பாக்கம்
செய்யாறு அடுத்துள்ள வெம்பாக்கம் அங்கன்வாடி மையத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றியம் வெம்பாக்கம் அங்கன்வாடி மையத்தில் ஆறு மாத குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் ராஜு தலைமை தாங்கினார் .
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 147 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
மேலும் அங்கன்வாடியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றிய கழகச் செயலாளர் சீனிவாசன் ,ஒன்றிய குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர்கள், அங்கன்வாடி ஊட்டச்சத்து மைய பொறுப்பாளர்கள், அங்கன்வாடி மைய ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.