மாநில அளவிலான கைப்பந்து போட்டி கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற செய்யார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், குடியரசு தினம் மற்றும் பாரதியாா் தினத்தையொட்டி, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இதில், திருவண்ணாமலை மாவட்டத்துக்குள்பட்ட பள்ளிகள் மற்றும் 11 குறுவட்ட மையங்களில் இருந்து 17 வயதுக்குள்பட்டவா்களுக்கு கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. இதில், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்று வெற்றி பெற்றதுடன், மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனா்.
கால்பந்து போட்டியிலும் முதலிடம்
செய்யார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையேயான ஆண்களுக்கான குடியரசு தின பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் 11 குறுவட்ட மையத்தை சார்ந்த கால்பந்து அணிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் மூன்று பிரிவுகளிலும் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விளையாடி தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்று தனது கடந்த ஆண்டு சாதனையை தக்க வைத்துக் கொண்டனர்.
இந்த வெற்றியின் மூலம் மாநில போட்டிக்கு தகுதி பெற்று தேர்வாகியுள்ளனர்.
மாணவர்களுக்கு பாராட்டு
இந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு செய்யாறு சிப்காட் நிறுவனம் தனது நிறுவன செயல் திட்டத்தின் கீழ் விக்டரி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் மூலமாக தொடர்ந்து மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து விளையாட்டு உபகரணங்கள் சீருடைகள் சத்து உணவுகள் விளையாட்டுப் போட்டிகளுக்கு வாய்ப்பு அளித்தல் போன்றவற்றை செய்து வருகின்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியர், உதவி தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள் ,மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனருக்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் ,வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகளை வழங்கினர்.