திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசன ஏரிகள் புத்துயிர் அளித்தல் 2024 – 25, மாவட்ட அளவில் பெரிய கல்வி நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்கள் ,தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் கலந்தா ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய ஊரகப் பகுதிகளில் உள்ள சிறுபாசன ஏரிகளை அதன் கொள்ளளவுக்கு மீட்டெடுக்கவும், நிலத்தடி நீர் செறிவூட்டலை அதிகரிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், தமிழக அரசினால் 500 கோடி மதிப்பீட்டில் சிறுபாசன ஏரிகளை புனரமைக்க நடப்பு ஆண்டில் மேற்கொள்ள வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1272 சிறுபாசன ஏரிகளில் கடந்த ஆண்டுகளில் புனரமைப்பு செய்யப்பட்ட சிறுபாசன ஏரிகளை தவிர்த்து இன்னும் சீரமைக்கப்பட வேண்டிய 402 ஏரிகளில் 300 ஏரிகளை சீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பொது மக்களின் முழு ஈடுபாட்டை உறுதி செய்வதற்காக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ,சமூக அடிப்படையிலான அமைப்புகள், நமக்கு நாமே திட்டம், சமூகப் பொறுப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள், மூலம் பெறப்படும் நிதியை கொண்டு சிறுபாசன ஏரிகளை சீரமைக்க முன்னுரிமை அளித்து செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
தற்போது புனரமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள சிறுபாசன ஏரிகளின் எண்ணிக்கை 153 ஆகும்.
மாவட்ட முழுவதும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சமூக அடிப்படையிலான அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனத்தின் பிரதிநிதிகள் உடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று, தேசிய வேளாண் நிறுவனத்தின் அறக்கட்டளை மூலம் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் வந்தவாசி ஊராட்சி ஒன்றியம் நாவல் பாக்கம் மற்றும் மூடூர் ஆகிய கிராமங்களில் சிறுபாசன ஏரிகளை புணரமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆட்சியர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , வருவாய்த்துறை அலுவலர்கள், கோட்டாட்சியர்கள் , தன்னார்வலர்கள், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.