திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கீழ் வந்தவாசி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் வந்தவாசி வட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் இரு தினங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மாவட்ட ஆட்சியருடன் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர்.
வந்தவாசி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு, காலை உணவு திட்டத்தில் பயன் பெறும் மாணவ மாணவிகளின் விபரங்கள் குறித்தும், உணவினை சுகாதாரமாகவும் தரமாகவும் சமைக்க அறிவுரைகளை ஆட்சியர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து வந்தவாசியில் தீயணைப்பு நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் ஆய்வு செய்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், நோயாளிகளிடம் சிகிச்சைகள் பற்றியும் அவர்களுக்கு அளிக்கப்படும் மருந்து உணவு குறித்தும் மருந்துகளின் இருப்பு குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார். பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் கழிப்பறைகள் சுகாதாரமாக உள்ளதா என்று ஆய்வு செய்தார். மேலும் பேருந்து நிலையத்துக்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது செய்யாறு சார் ஆட்சியர் பல்லவிவர்மா, நகராட்சி ஆணையாளர் சோனியா, வருவாய் கோட்டாட்சியர்கள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.