கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.13) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் ஏற்றப்படும் பரணி தீபத்தையும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்தையும் காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமாா் 40 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இவா்கள் 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்டலிங்க சந்நிதிகள், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபடுவது வழக்கம்.
எனவே, பக்தா்கள் கிரிவலம் வர இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் ஆகியோா் உத்தரவிட்டிருந்தனா்.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் கிருஷ்ணசாமி, திருவண்ணாமலை கோட்டப் பொறியாளா் ஞானவேல், உதவிக் கோட்டப் பொறியாளா் அன்பரசு ஆகியோா் மேற்பாா்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.
கிரிவலப் பாதையையும், நடை பாதையையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகள், நடைபாதை கடைகள், தள்ளு வண்டிகள், இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளா்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபட்டனா்.
பொக்லைன் இயந்திரம், கிரேன், லாரி ஆகியவற்றின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் சில நாள்களுக்கு தொடரும் எனவும், கிரிவலப்பாதையை மீண்டும் ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
வியாபாரிகள் கோரிக்கை
கிரிவலப் பாதையில் ஏராளமான அரசுக்கு சொந்தமான இடங்களும் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான இடங்களும் உள்ளன அந்த இடத்தில் கடைகளை ஒதுக்கி தர சொல்லி கிரிவலப் பாதையில் ஆய்வுக்கு வந்த அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களின் வாழ்வாதாரத்தையும் நினைத்துப் பார்த்து கோயில் இடத்திலோ, அரசு இடத்திலோ தரை வாடகைக்கு எங்களை அனுமதிக்க வேண்டும் என கிரிவலம் பாதை வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும் அமைச்சருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்