திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் மருத்துவாம் பாடி கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் முருகையன் ,வட்டார திட்ட குழு தலைவர் மணிமாறன் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலு, வெங்கடேஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .அனைவரையும் ஊராட்சி மன்ற தலைவர் உமா வெங்கடேசன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், திமுக மாநில மருத்துவர் அணி துணைத்தலைவரும் மாநில தடகள சங்க துணைத்தலைவருமான எ.வ. வே. கம்பன், ஆகியோர் கலந்து கொண்டு புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
வாக்குறுதியை நிறைவேற்றிய கம்பன் மக்கள் மகிழ்ச்சி
இந்த மருத்துவாம் பாடி ஊராட்சியில் ஆதி திராவிடர் காலனி பகுதிக்கு செல்லும் சாலை ஜல்லி சாலையாக இருந்ததால் நடப்பதற்கு சிரமமான முறையில் இருந்து வந்தது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்பு செய்தனர் . இது குறித்து தகவல் அறிந்த திமுக மாநில மருத்துவர் அணி தலைவர் மற்றும் போளூர் தொகுதி பொறுப்பாளருமான எ.வ. வே. கம்பன் அப்பகுதி மக்களிடம் சமரசம் பேசி சாலையை தேர்தல் முடிந்து சிறிது காலத்தில் அமைத்து தருகிறோம் என வாக்குறுதி அளித்து இருந்தார்.
அந்த வாக்குறுதியின் பேரில் தற்போதுமிழக முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 40 லட்சத்தில் தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
இதனால் வாக்குறுதியை நிறைவேற்றிய கம்பனுக்கு நன்றி தெரிவித்து அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.