திருவண்ணாமலையில் தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயக்குமாரி தலைமை வகித்தார் உதவி தலைமை ஆசிரியர் சண்முகம் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் வெங்கடேசன் , செயலாளர் ஜான் வெலிங்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ. ஏ. ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிளஸ்-1 பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் படிக்கும் மாணவர்களுக்காக எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் வழங்கி வருகிறார். அதில் மாணவர்கள் தொலைதூரத்தில் இருந்து வருவதால் அவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கியும், இலவச பஸ் பாஸ் வசதியும் வழங்கி வருகிறார். அதேபோல் படிக்கும் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி, கற்றல் கற்பித்தல், நான் முதல்வன் என்ற பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்காக வழங்கி வருகிறார்.
பெண் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் தோறும் ரூபாய் 1000, அதே போல் ஆண் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம் தோறும் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது.
இப்படி எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் இந்த ஆட்சியில் தான் வழங்கப்பட்டு வருகிறது
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி நமது மாவட்டத்திற்கும் நமது பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என பேசினார்.
இவ்விழாவில் ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியன், முத்து கணேசன், முதுநிலை ஆசிரியர் சதீஷ்குமார், மகேஷ், ஷைலஜா ,தாமோதரன், முருகச்செல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.