குறிப்பாக தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் வாழும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ஆண்டு ஒன்றுக்கு 100 நாள் பணி வழங்கப்பட்டது அதற்கான ஊதியம் வழங்கப்படுகிறது. இதனை மத்திய மாநில அரசுகள் கண்காணித்து பணிகள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது பல்வேறு கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை, சில பகுதிகள் நகராட்சி , பேரூராட்சியுடன் இணைக்கப்படுவதால் பணி இல்லை என குற்றம் சாட்டி தங்களை புறக்கணிப்பதாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தற்போது 100 நாள் வேலைவாய்ப்பு பணி நீர்நிலைகள் உருவாக்க மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்டு பசுமை விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் மற்றும் கண்டன போராட்டங்கள் என தற்போது வரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று கிராம சபை கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளிலும் காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்த நிலையில் பரந்தூர் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதன் கீழ் உள்ள சிறு கிராமத்தில் நூறு நாள் வேலைவாய்ப்பு பணியாளர்களுக்கு பணி வழங்கப்பட்டது.
இது அப்பகுதியில் இருந்த பணியாளர்கள் கேட்டபோது கிராம சபை கூட்டத்திற்கு செல்லவும் பணி வழங்கியதால் இங்கு பணிக்கு வந்தது கடந்த வாரத்தில் பணிகள் வழங்காததால் இதற்கு முன்னுரிமை அளித்துவிட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சபை கூட்டம் என்பது பொதுமக்களின் பிரச்சனைகளை அரசு அலுவலர்கள் முன்னிலையில் கூறி அதற்கான தீர்வு காண வேண்டும் என்பதே ஆகும். குறிப்பாக இனி வரும் இரண்டு மாத காலம் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கவும் அறிவுறுத்தப்பட்ட நிலையில் இதில் கலந்து கொள்ளாது பணிகளை மேற்கொண்டது அதிர்ச்சி அளித்தது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர், தற்போது கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டால் விமான நிலைய திட்டம் கேள்வி எழுப்பும் வாய்ப்பு உள்ளதால் அதை தவிர்க்க இப்பகுதி மக்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக கிராம சபையை புறக்கணித்துவிட்டு 100 நாள் வேலை வாய்ப்புக்கு சென்ற பொது மக்களின் மனநிலையை என்னவென்று கூறுவது ? இதன்பின் உள்ளாட்சி பிரதிநிதிகள் எந்த நலனும் தங்களுக்கு செய்யவில்லை என கூறுவது எவ்வகை நியாயம் என மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.