Close
நவம்பர் 24, 2024 6:47 காலை

ஜவ்வாது மலை ஒன்றியத்தில் சிறப்பு மருத்துவ முகாம்..!

வரும் முன் காப்போம் திட்டத்தில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியம் மேல் பட்டு கிராமத்தில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு துறை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வேலூர் விஐடி ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கல்வி மையம், கிராம வள மையம் ஆகியவை இணைந்து நடத்தும் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் அத்திப்பட்டு ஊராட்சி மேல்பட்டு கிராமத்தில் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமிற்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலைஞரின் வருமுன் காப்போம் முகாமை துவக்கி வைத்து பேசினார்.

அப்போது எம்எல்ஏ பேசியதாவது :

சாதாரண அடித்தட்டு மக்களும் மிக உயரிய சிகிச்சை பெற்று பயனடைய கூடிய திட்டமாக இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இனிவரும் காலங்களில் ஆண்டுக்கு நான்கு முறை மக்கள் பயன்படுத்தக்கூடிய திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏழை எளிய மக்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு உயர்தர சிகிச்சை பெறக்கூடிய அளவிற்கு அரசு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என பேசினார்.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமில் பொது , இருதயம், கண் மற்றும் பல் மருத்துவ முகாம் உட்பட கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மருத்துவப் பொருட்கள் ரத்தப் பரிசோதனை மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உடல் சார்ந்த பரிசோதனைகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சிவசேமன் மற்றும் விஐடி இணை இயக்குனர் சுந்தரராஜன், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், பொது மற்றும் இருதய மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் ,பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், திட்ட உதவியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top