Close
நவம்பர் 24, 2024 6:58 காலை

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி, துணை சபாநாயகர்..!

நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சிகளுக்கும் சென்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் அண்ணாமலை ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய துணை செயலாளர் குபேரன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது

தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் வழங்கி வருகிறார்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம்தோறும் ரூபாய் ஆயிரம், தமிழ் புதல்வன் திட்டத்தில் படிக்கும் இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம், புதுமைப்பெண் திட்டத்தில் பெண் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு ரூபாய் ஆயிரம், அதே போல் பள்ளி படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் படிப்பதற்கு எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது, இல்லம் தேடி கல்வி, கற்றல் கற்பித்தல், நான் முதல்வன் என்று பல்வேறு திட்டத்தில் பல சலுகைகளை வழங்கி வருகிறார்.

மேலும் கிராமங்கள் வளர்ச்சி அடைவதற்காக பல வளர்ச்சி பணிகளை வழங்கி வருகிறார் .தமிழக மக்களுக்காக தினம் தோறும் புது திட்டங்களை வழங்கி வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றிக் கொடுத்து வருகிறார்.

அதேபோல் படிக்கும் இளைஞர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல திட்டங்களும் பல சலுகைகளும் உடனுக்குடன் வழங்கி வருகிறார்.

விளையாட்டுத்துறையில் சாதித்த மாணவர்களுக்கு அரசு துறையில் வேலை வாய்ப்புகளும் வழங்கப்பட உள்ளது.

இது போன்ற திட்டங்கள் அனைத்தும் திராவிடம் ஆடல் ஆட்சியில் தான் வழங்கப்பட்டு வருகிறது .அதை என்றும் மறவாமல் திராவிடம் ஆடல் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று துணை சபாநாயகர் வாக்களித்த மக்களிடம் நன்றி கூறி பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள்,  அமைப்பாளர்கள், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top