Close
நவம்பர் 24, 2024 9:44 காலை

கிராமசபை கூட்டங்களில் துப்புரவு பணியாளர்களுக்கு மரியாதை செய்து கௌரவம்..!

பெரியபாளையம் அருகே உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு எல்லாபுரம் ஒன்றியத்தில் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தினங்களை முன்னிட்டு பெரியபாளையம், வடமதுரை, வெங்கல், கன்னிகைப்பேர், ஆலப்பாக்கம்,உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராம சபா கூட்டங்கள் நடைபெற்றது.

பெரியபாளையத்தில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி திருமலை தலைமை வகித்தார். துணைத் தலைவர் மகேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அரசு திட்ட பணிகள், ஊராட்சியில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி பணிகளை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பற்றாளர் முரளி கிருஷ்ணா, கலந்து கொண்டார். முடிவில் ஊராட்சி செயலர் குமரவேல் நன்றி கூறினார்.

வெங்கல் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சுகந்தி ராணி லிங்கன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பகுத்தறிவு பணியாளர் விருதை ஊராட்சியில் பணிபுரியும் 28 தூய்மை காவலர், மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சால்வை அணிவித்து கேடயங்களை நினைவு பரிசாக வழங்கி கௌரவித்தார்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவருக்கு கிராம மக்களின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். முடிவில் ஊராட்சி செயலர் உமாபதி நன்றி தெரிவித்தார்.

கன்னிகைப்பேர் ஊராட்சி கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற வளாகத்தில் அதன் தலைவர் காயத்ரி உதயகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மேனகா சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி குமார் முன்னிலை வகித்தனர். பற்றாளராக பாலா ஜெயலட்சுமி கலந்து கொண்டார். ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 35 தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கேடயங்களை வழங்கி கௌரவித்தனர்.
இதில் வார்டு உறுப்பினர்கள் சுரேஷ், ஜெயா செந்தில்குமார், உமா வினோத், இந்திரா பாஸ்கர், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் பொன்னரசு நன்றி கூறினார்.

வடமதுரை கிராம சபா கூட்டம் அதன் தலைவர் காயத்ரி கோதண்டன் தலைமை தாங்கினார். இதில் துணைத் தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ், ஒன்றிய குழு கவுன்சிலர் ஜமுனா அப்புன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் ஆலப்பாக்கம் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது இதில் துணைத் தலைவர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குமரப்பேட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அதன் தலைவர் வெங்கடேஷ் பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் நாகபூஷணம், வார்டு உறுப்பினர்கள் ஜெயலட்சுமி பாபு, அமுதா ராமு பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சோபன்பாபு நன்றி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top