Close
நவம்பர் 24, 2024 4:42 மணி

நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத் தேர் திருவிழா

நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆயல்த் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற, சிறப்பு திருப்பணியில் சேலம் மறைமாவட்ட தலைமை ஆயர் அருள்செல்வம் ராயப்பன் பேசினார்.

நாமக்கல்லில் கிறிஸ்து அரசர் ஆலயத் தேர்த்திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். நாமக்கல்லில் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு விழா, கடந்த 17ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 23ம் தேதி வரை தினசரி மாலை, 6 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெற்றது. நேற்று காலை, 8:30 மணிக்கு, சேலம் மறைமாவட்ட தலைமை ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில், புதுநன்மை, உறுதிபூசுதல் விழா, ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆகியவை சிறப்பாக நடைபெற்றது.

மாலை, 6 மணிக்கு, திருவிழா கூட்டுத்திருப்பலி, இக்னேசியஸ் பிதேலிஸ் தலைமையில் நடந்தது. தொடர்ந்துஅமல் மகிமைராஜ் தலைமையில், அலங்கார தேர் மந்திரிப்பு நிகழ்ச்சி நடந்தது.

பின்னர், மின் அலங்காரம் செய்யப்பட்ட ரதத்தில் கிறிஸ்து எழுந்தருளி முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினார். வழிநெடுகிலும், ஏராளமான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மாலை அணிவித்தும் புனிதரை வணங்கினர்.
இரவு, திவ்ய நற்கருணை ஆசீர் மற்றும் கொடியிறக்கம், திருத்தொண்டர் அஜித்குமார் தலைமையில் நடந்தது. ஏற்பாடுகளை, நாமக்கல் பங்கு தந்தை தாமஸ் மாணிக்கம், அருட்சகோதரிகள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top