Close
நவம்பர் 25, 2024 5:41 காலை

வாக்காளர் சிறப்பு முகாம் : துணை சபாநாயகர் ஆய்வு..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை ஆய்வு செய்த துணை சபாநாயகர் பிச்சாண்டி

கீழ்பெண்ணாத்தூர் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை சிறப்பு முகாமினை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 1.1. 2025 ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம்கள் அக்டோபர் 29ஆம் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 6ம் தேதி வரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் நவம்பர் மாதம் 16, 17 மற்றும் 23 ,24ம் தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கீழ்பெண்ணாத்தூர்

திருவண்ணாமலை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி வெளியிடப்பட்டது இதன்படி கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் ஆண்கள் 125397, பெண்கள் 130766 ,இதர் 10 என மொத்தம் 256173 வாக்காளர்கள் உள்ளனர்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி , வேட்டவலம் பேரூராட்சி,  மற்றும் கீழ்பெண்ணாத்தூர் பொலக்குணம், ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் 18 வயதை நிறைவடைந்த இளம் வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்த்தல்

மற்றும் இறந்தோர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல் ,முகவரி மாற்றம் திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகள் வாக்காளர் பட்டியல் இணைக்கு பணிகளில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு முகாமினை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பார்வையிட்டார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தொகுதி பொறுப்பாளர் மணிமாறன், சோமாசி பாடி தொகுதி பொறுப்பாளர் குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் குப்பு ,கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், திமுக கிளைச் செயலாளர் ,ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top