Close
நவம்பர் 25, 2024 5:13 காலை

சிறுபான்மையினர் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்..!

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன் உதவி, குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

திட்டம் 1 இன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்புறத்திற்கு ரூபாய் 1.20 லட்சமும் கிராமப்புறத்திற்கு ரூபாய் 98 ஆயிரம் என இருந்தது தற்போது இரண்டு பகுதிகளுக்கும் பொதுவாக ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என உயர்த்தப்பட்டுள்ளது.

திட்டம் 2 இன்  கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சம் விடாமல் இருத்தல் வேண்டும்.

தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூபாய் 20 இலட்சமும் திட்டம் இரண்டின் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம் பெண்களுக்கு 6 சதவீதமும் வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூபாய் 30 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம் பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிக கடனாக ரூபாய் 10 லட்சம் வழங்கப்படுகிறது.

சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் நபர் ஒருவருக்கு ரூபாய் ஒரு லட்சம் ஆண்டிற்கு ஏழு சதவீதம் வடிவிகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

சிறுபான்மை மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை முதுகலை தொழிற்கல்வி தொழில் நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு அதிக பட்சமாக திட்டம் ஒன்றின் கீழ் 20 லட்சம் வரையில் 3% வட்டி விகிதத்திலும் திட்டம் இரண்டின் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூபாய் 30 லட்சம் வரையிலும் கல்வி கடன் உதவி வழங்கப்படுகிறது.

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் மாவட்ட ஆட்சியரகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று ,உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விபரம் ,திட்ட அறிக்கை ,ஓட்டுனர் உரிமம் மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றுகள் அசல் உண்மை சான்றிதழ் கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றுகள் ஆகிய ஆவணங்களின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top