பெரணமல்லூர் ஒன்றியத்தில் ரூபாய் 67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை ஆரம்பிப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் அன்மருதை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் குழந்தை மேம்பாட்டு பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 44 லட்சம் மதிப்பீட்டில் புதிய மூன்று வகுப்பறை கட்டிடம்
மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம் ,ஆதிதிராவிடர் பகுதியில் மாநில நிதி குழு மானியம் மாவட்ட ஊராட்சி குழு நிதி ரூபாய் 6 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நாடக மேடை ஆகிய கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டு இதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டுரங்கன் , பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், பாலமுருகன், வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள்,
சேத்துப்பட்டு நகர திமுக செயலாளர் முருகன், ஒன்றிய துணை செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் ,ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.