Close
மார்ச் 31, 2025 4:46 மணி

நாமக்கல்லில் இன்று முழு கடையடைப்பு: பொதுமக்கள் கடும் பாதிப்பு

பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து செல்லக்கேரி, நாமக்கல்லில் இன்று நடைபெறும் வணிகர் சங்க கடையடைப்பு போராட்டத்தால், பரப்பாக இயங்கி வரும் கடைவீதி வெறிச்சேடிக்கிடக்கிறது.

நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும், பழைய பஸ் நிலையத்திற்குள் சென்று வரவேண்டும் என்பதை வலியுறுத்தி, நாமக்கல்லில் இன்று முழு கடையடைப்பு பேராட்டம் நடைபெற்று வருகிறது. இதுனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல்லில் கடந்த 10ம் தேதி முதல் புதிய பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த பஸ் ஸ்டாண்டிற்குள் டவுன் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. பயணிகள் அனைவரும் ரோட்டில் இறக்கிவிடப்படுவதால் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பழைய பஸ் நிலையத்தில் பல ஆண்டுகளாக கடைகள் வைத்துள்ள கடை உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்லும் துறையூர், திருச்சி மற்றும் மோகனூர் செல்லும் அனைத்து பஸ்களும், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல வேண்டும், சேலத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் அமைந்துள்ள முதலைப்பட்டி வரை வந்து செல்லும் பஸ்களுக்கு, ஏற்கனவே இருந்த தூரத்தை விட 7 கி.மீ குறைவதால், பஸ் கட்டணத்தை குறைக்கவேண்டும்,

வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் ஐயத்தை போக்கிடும் வகையில், தற்போது உள்ள பழைய ஸ்டாண்டு தொடர்ந்து டவுன் பஸ் ஸ்டாண்டாக நிரந்தரமாக செயல்படும் என்கிற உறுதியை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அளிக்க வேண்டும், புதிய பஸ் ஸ்டாண்டிற்கும் – பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,

இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு சுமார் 50க்கும் மேற்பட்ட பல்வேறு வணிகர்கள் சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

இதையொட்டி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை, நாமக்கல் நகரில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரிகள், மளிகைக்கடைகள், ஜவுளி கடைகள், நகைக் கடைகள், பாத்திரக்கடைகள், ஆட்டேமொபைல் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

மருந்துக்கடைகள் மதியம் 2 மணிவரை மூடப்பட்டிருக்கும். கடையடைப்பு போராட்டத்தால், நாமக்கல் மெயின்ரோடு, கடைவீதி, துறையூர் ரோடு, திருச்சி ரோடு, மோகனூர் ரோடு, பரமத்தி ரோடு உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி உள்ளன. வெளியூர்களில் இருந்த நாமக்கல் வந்த பொதுமக்கள் தாங்கள் விரும்பிய பொருட்களை வாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top