Close
ஏப்ரல் 1, 2025 11:59 மணி

தனியார் தொழிற்சாலை நிறுவனம் வழங்கிய இலவச தாய் சேய் ஊர்தியினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி

தனியார் தொழிற்சாலை நிறுவனம் வழங்கிய இலவச தாய் சேய் ஊர்தியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்விபொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது. இம் மருத்துவமனைக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள் மற்றும் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர்.

குறிப்பாக மகப்பேறு மருத்துவத்திற்கான 8 கோடி ரூபாய் மதிப்பிற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு சிக்கலான பிரசவ சேவை கூட திறம்பட மேற்கொண்டு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 30க்கும் மேற்பட்ட பெண்கள் பிரசவித்து வருகின்றனர்.

மேலும் தேசிய சுகாதார இயக்கம் சார்பில் பிரசவித்த பெண்களை இலவசமாக அழைத்துச் சென்று வீடுகளில் விடும் திட்டம் 102 என்ற இலவச அழைப்பின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இச்சேவைக்காக ஒரே ஒரு வாகனம் பயன்படுத்தி வந்த நிலையில், மற்றொரு வாகனத்தை தனியார் தொழிற்சாலை நிறுவனமான ஏசியன் பெயிண்ட் நிறுவனம் சுமார் 20 லட்சம் மதிப்பிலான வாகனத்தினை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கியுள்ளது.

இது வாகன சேவையில் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பயன்பாட்டிற்கு அவ்வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

அதிக பிரசவங்கள் நடைபெறும் நிலையில் தாய்மார்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்ல ஏற்படும் காலதாமதங்கள் இனி தவிர்க்கப்பட்டு அனைவரும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை இணை இயக்குனர் கோபிநாத் , ஏசியன் பெயிண்ட் நிர்வாகிகள் ஜெபநேசன் பாக்கியராஜ் அஜய் மானசா உள்ளிட்ட மருத்துவமனை அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top