நாமக்கல் :
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தேசிய என்சிசி தின விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, சேலம் 12வது பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் கர்னல் தினேஷ் மற்றும் கல்லூரி முதல்வர் ராஜா ஆகியோர் வழிகாட்டுதலின்பேரில், புனித சாகர் அபியான் திட்டத்தின் கீழ் மோகனூர், காவிரி ஆற்றை தூய்மை செய்யும் பணியை என்சிசி மாணவர்கள் மேற்கொண்டனர்.
சேலம் 12வது பட்டாலியன் பிரிவை சார்ந்த சுபேதார் ஜெயின் ஜோஸ் மற்றும் 65 என்சிசி மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, காவிரி ஆற்றின் கரையில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகளை சேகரித்தனர். குப்பைகளை மட்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து சுமார் 120 கிலோ எடையுள்ள குப்பைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்பி வைக்கப்பட்டது.
மேலும் காவிரி ஆற்றின் கரையில் உள்ள சிவன் கோயில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களும் சுத்தம் செய்யப்பட்டது. கல்லூரி என்சிசி அலுவலர் சவுந்தரராஜன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்திருந்தார்.