காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 10 மணி அளவில் துவங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது சொந்த நிலம் , குடும்ப அட்டை உள்ளிட்ட பிரச்சினை மற்றும் பொதுநல பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு வழங்குவது வழக்கம்.
இதே போல் மாவட்ட ஆட்சியர் இருக்கை அருகே மாவட்ட முக்கிய நிர்வாக அதிகாரிகள் அமர்ந்து மனுக்களை பெறுவதும் வழக்கம்.
அவ்வகையில் இன்று ஏராளமான மனு அளிக்க பொதுமக்கள் வரிசையாக உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அப்போது பொதுமக்கள் நேராக ஆட்சியர் இருக்கைக்கு நேர் எதிரில் வரிசையாக மனு அளிக்க நின்றனர்.
அலுவலக உதவியாளர்கள் பிற அதிகாரிகளிடம் மனு அளிக்கலாம் என கூறிய பிறகும் மக்களை அளிக்க பொதுமக்கள் விருப்பம் இல்லாமல் அங்கேயே நின்றதால் பிற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, மாவட்ட ஆட்சியரிடம் இந்த குறைகளை தெரிவித்தால் நேரடியாக அவர் விசாரணை மேற்கொள்வார். அதனால் அலுவலர்கள் அக்கறையுடன் மனு குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தனர்.
பிற அதிகாரிகளிடம் அளிக்கலாமே என கேட்டபோதும், அது அந்த அளவுக்கு அழுத்தம் தராது என தெரிவிக்கின்றனர்.