நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாளை முதல் 3 நாட்கள், மொத்தம் 100 இடங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இது குறித்து, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நாளை 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை 3 நாட்கள் மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கொண்டாடப்பட உள்ளது.
நாளை 27ம் தேதி, நாமக்கல் கிழக்கு நகர திமுக சார்பில், மாநகர துணை மேயர் பூபதி தலைமையில் 3, 12, 13வது வார்டுகளில் துணை முதலமைச்சர் உதய நிதி பிறந்த நாள் விழா நடைபெறும். விழாவில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரனங்கள் வழங்குதல், மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு மளிகைப்பொருட்கள் வழங்குதல், பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
காலை 10 மணிக்கு நாமக்கல் மேற்கு நகர செயலாளர் சிவகுமார் தலைமையில் திமுக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த் தலைமையில் 26, 35வது வார்டுகளிலும், லத்துவாடியிலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
அதேபோல் அன்றைய தினமே, ராசிபுரத்தில் நகர செயலாளர் சங்கர் தலைமையில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா நடைபெறும். நாமக்கல் ஊரட்சி ஒன்றியப்பகுதியில் ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமையிலும், மோகனூர் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் நவலடி தலைமையிலும், புதுச்சத்திரத்தில் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் கவுதம் தலைமையிலும், புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலும், சேந்தமங்கலம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமையிலும், எருமப்பட்டி ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையிலும் துணை முதல்வர் பிறந்த நாள் விழா நடைபெறும்.
நாளை மறுநாள் 28ம் தேதி, எருமப்பட்டி ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையில், வடுகப்பட்டி, காவக்காரப்பட்டி, வரகூர், பவித்திரம் ஆகிய இடங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெறும்.
கொல்லிமலையில் ஒன்றிய செயலாளர் செந்தில்முருகன் தலைமையிலும், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் தலைமையிலும் 27, 28 ஆகிய 2 நாட்கள் பிறந்த நாள் விழா நடைபெறும்.
வெண்ணந்தூர் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் துரைசாமி தலைமையில் 27ம் தேதி பிறந்த நாள் விழா நடைபெறும். நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் ராமசுவாமி தலைமையில் 27, 28 ஆகிய 2 நாட்கள் துணை முதல்வர் பிறந்த நாள் விழா நடைபெறும்.
நாளை 27ம் தேதி, மோகனூர் டவுன் பஞ்சாயத்தில் திமுக செயலாளர் செல்லவேல் தலைமையிலும், எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் திமுக செயலாளர் பழனியாண்டி தலைமையிலும் பிறந்த நாள் விழா நடைபெறும். காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்சாயத்தில், டவுன் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் தலைமையிலும், சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்தில் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வராஜ் தலைமையிலும், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில், டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அன்பழகன் தலைமையிலும் 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் பிறந்த நாள் விழா நடைபெறும்.
வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்தில், டவுன் பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ் தலைமையிலும் 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் பிறந்த நாள் விழா நடைபெறும். வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்தில், டவுன் பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ் தலைமையிலும், அத்தனூர் டவுன் பஞ்சாயத்தில் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் கண்ணன் தலைமையிலும் நாளை 27ம் தேதி துணை முதல்வர் பிறந்த நாள் விழா நடைபெறும்.
புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் திமுக செயலாளர் ஜெயகுமார் தலைமையில் 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் பிறந்த நாள் விழா நடைபெறும். பட்டணம் டவுன் பஞ்சாயத்தில் திமுக செயலாளர் நல்லதம்பி தலைமையிலும், பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்தில், டவுன் பஞ்சாயத்து தலைவர் சுப்ரமணியம் தலைமையிலும் 27ம் தேதி பிறந்த நாள் விழா நடைபெறும்.
சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் திமுக செயலாளர் தனபால் தலைமையில் 29ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெறும்.
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில், 3 நாட்கள் நடைபெறும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் சம்மந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு திமுக கொடியை ஏற்றி, பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.