Close
நவம்பர் 28, 2024 7:40 காலை

பளு தூக்கும் போட்டியில் உலக சாதனை படைத்த செய்யாறு மாணவி

மாணவி கஸ்தூரியை பாராட்டிய தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு செல்வ விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜமூா்த்தி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயா.

தம்பதியினரின் மூன்றாவது மகள் கஸ்தூரி. இவா், சென்னையில் பிஎஸ்சி கணிதம் படித்து வருகிறாா்

இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பளு தூக்கும் போட்டிகளுக்கான தொடர் பயிற்சி  மேற்கொண்டு உள்ளார்.

பயிற்சியின் போதே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்துள்ளார் இதனை தொடர்ந்து ரஷ்யாவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றார்.

ரஷ்யாவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் 45 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று, உலகின் வலிமையான பெண் என்ற பட்டத்தை பெற்று சாதனைப் படைத்தாா்.

பாராட்டு: ரஷ்யாவில் இருந்து செய்யாறுக்கு திரும்பிய மாணவி கஸ்தூரியை தன்னாா்வலா்கள், தொழிலதிபா்கள் உள்பட பலா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

இதுகுறித்து, மாணவி கஸ்தூரி கூறியதாவது:

என்னைப் போல் எந்த பின்புலம் இல்லாமல் பல ஏழை எளிய மாணவா்கள் விளையாட்டில் சாதிக்க நினைக்கின்றனா்.ஆனால், அவா்களுக்கு போதுமான உதவிகள் கிடைக்காததால், தங்கள் திறமைகளை தங்களுக்குள்ளேயே புதைத்து வருகின்றனா். அவா்களை, விளையாட்டுத் துறை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா்.

சிலம்பம் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான சிலம்பம் போட்டிகள் கடந்த நவ.25-ஆம் தேதி நடைபெற்றன. இதில், 14,17,19 வயதுக்குள்பட்ட மாணவிகள் 23 எடை பிரிவுகளில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300 மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், கோவிலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 2 மாணவிகள் 19 வயதுக்குள்பட்ட பிரிவில் வெற்றி பெற்று தங்கப் பதக்கமும், 14 வயதுக்குள்பட்ட பிரிவில் 2 மாணவிகள் வெண்கல பதக்கமும் வென்றனா்.

இவா்களில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவிகள் வருகிற ஜனவரி மாதம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனா். சிலம்பம் போட்டியில் சாதனைப் படைத்த பள்ளி மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் சரவணன், பாக்யராஜ் ஆகியோருக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில், பள்ளியின் தலைமை ஆசிரியா்  சண்முகசுந்தரம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பழனி, பள்ளி மேலாண்மை வளா்ச்சி குழுத் தலைவா் பானுப்பிரியா ஆகியோா் பங்கேற்று வாழத்து தெரிவித்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top