சிவகங்கை:
தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், திருப்புவனம் வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, தகுதியுடைய 78 பயனாளிகளுக்கு ரூ.50.44 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், திருப்புவனம் வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில், அரசின் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டு, பொதுமக்களை நேரில் சந்தித்து, கோரிக்கை மனுக்களைப் பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணுகின்ற அரசு இயந்திரம் களத்திற்கு வரும் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், அறிவித்துள்ளார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வுகளில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவது உறுதி செய்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் மாதந்தோறும் வட்ட அளவிலான முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, இம்மாதத்திற்கு இன்றைய தினம் திருப்புவனம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த முதன்மை அலுவலர்களும் தங்களது துறை ரீதியாக வட்டளவில் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், அரசனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் இயங்கி வரும் , TNIAMP II உப்பாறு சிவகங்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் ஆகியன குறித்தும்,
சொக்கையன்பட்டி கிராமத்தில், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.01.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் ஆகியன குறித்தும், ஏனாதி கிராமத்தில் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.30,000/- மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வீடுகள் சீரமைப்பு பணிகள் குறித்தும்,
நீர்வளத்துறையின் சார்பில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏனாதி-கோமாட்சியேந்தல் பகுதியில் மடை பழுது நீக்குதல் மந்றும் ஆயக்கட்டு பகுதியில் பாசன வசதி ஆகியன குறித்தும், பாப்பாக்குடி ஊராட்சிக்குட்பட்ட கணக்கங்குடி கண்மாயின் கலுங்கு நீர் போக்கி ஓடை பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்தும்,
பாப்பாக்குடி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் பொதுமக்களின் வருகை, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகள் இருப்பு, மேம்படுத்த வேண்டிய வசதிகள் ஆகியன குறித்தும், அதே பகுதிக்குட்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வாழ்வாதார மேம்பாட்டு
நடவடிக்கைகள் மற்றும் பயன்பாடுகள் ஆகியன குறித்து மகளிர் சுயஉதவி குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடியும்,
அதே ஊராட்சிக்குட்பட்ட வெங்கட்டி கிராமத்தில் ரூ.18.42 இலட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கட்டுமானப் பணிகள் மற்றும் ரூ.03.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு
இல்லம் கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பாப்பாக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2022-2023-ன் கீழ் தரிசு நிலம் மேம்பாட்டு பணிகள் குறித்தும், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லாடனேந்தல் Q531-தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் இயங்கி வரும் நியாய விலைகடை மற்றும் தூதை ஊராட்சிக்குட்பட்ட டி.பாப்பான்குளம் கிராமத்தில் இயங்கி
வரும் நியாய விலைகடை ஆகியவைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும்,
பாப்பாக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 1 ஹெக்டேர் பரப்பளவிலான பந்தல் காய்கறி சாகுபடி தொகுப்பு மற்றும் வேளாண் பொறியியல் துறையின் சார்பில், விவசாயியின் விளை நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் சக்தி தொகுப்பு ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தும், திருப்புவனம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில்,
நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.169.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 8 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ரூ.164.54 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டள்ள 6 வகுப்பறை கட்டிடங்கள் ஆகிய குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தற்போது, திருப்புவனம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த பொது மக்களை ஒருங்கிணைத்து, கோரிக்கை மனுக்கள் பெறுவதற்கு ஏதுவாக திட்டமிடப்பட்டு, அதன்படி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களும் பெறப்படவுள்ளது.