சோழவந்தான்.
தமிழக முழுவதும் வாடகை கடைகளில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து, நாளை சோழவந்தானில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை அடைப்பு நடத்தப்படும் என, அனைத்து வியாபாரிகள் நல சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் கூறும்போது: சோழவந்தானில் உள்ள வணிக நிறுவனங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களுக்கு, ஜிஎஸ்டி வரி விதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை 29 .11 .24. வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சோழவந்தானில் உள்ள அனைத்து வணிக கடைகளும் அடைக்கப்படும் என ,முடிவு செய்துள்ளோம்.
இதற்கு அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என , கேட்டுக்
கொண்டனர். சோழவந்தான் அனைத்து வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் ஜவகர், செயலாளர் ஆதி பெருமாள், பொருளாளர் கேசவன் மற்றும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து, இன்று மாலை முறைப்படி அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.