Close
நவம்பர் 28, 2024 11:00 காலை

கணையப்புற்று நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை எடுப்பது அவசியம்..!

மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது.

கணையபுற்று நோயாளிகளுள் 20சதவீதத்திற்கும் குறைவானவர்களே சரியான நேரத்திற்கு சிகிச்சைக்கு வருகின்றனர்: 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 5 வருட உயிர்வாழ்வு விகிதம் 12சதமாக இருக்கிறது என மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் கருத்து.

மதுரை:

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ
மனையில், செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில், கணைய புற்றுநோய் என்பது, புற்றுநோய்களுள் அதிக ஆபத்தானவைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. மலக்குடல் புற்றுநோயில் உயிர்பிழைப்பு விகிதம் 40-50% ஆக இருக்கிற நிலையில், கணைய புற்றுநோயாளிகள் பாதிப்பிற்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு உயிர்வாழும் விகிதம் 12% ஆக இருக்கிறது.

உலகளவில் நான்காவது மிகப்பொதுவான புற்றுநோயாக ஏற்கனவே அறியப்படுகிற கணைய புற்றுநோய் நேர்வுகள் இந்தியாவிலும் கூட தொடர்ந்து நிலையாக அதிகரித்து வருகின்றன.

உலகம் முழுவதும் தினமும் 1200 பேர் கணையப் புற்றுநோய் கண்டறியப்படுகின்றனர் கணைய புற்றுநோய் மீதான விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படும் இத்தருணத்தில் மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும், குடல் இரைப்பை அறுவைசிகிச்சை துறையின் தலைவரும், மதுநிலை நிபுணருமான டாக்டர். ர மேஷ் அர்த்தனாரி இது தொடர்பாக கூறியபோது,

‘சிகிச்சையளிப்பதற்கு கணைய புற்றுநோயை மிகவும் கடினமானதாக ஆக்கும் ஒரு முக்கியமான காரணியாக இருப்பது இந்தியாவில் வெறும் 10-20% நோயாளிகளே உகந்த நேரத்திற்குள் சிகிச்சை பெற வேண்டும்என்று தேடி மருத்துவமனைகளுக்கு வருகின்றனர்.

எஞ்சிய நபர்களோ, எந்த வகையான சிகிச்சையும் பலனளிக்காத நேரத்தில் காலம் கடந்து மிகத்தாமதமாக சிகிச்சைக்கு வருகின்றனர்.மேற்கத்திய நாடுகளில் 80% கணைய புற்றுநோய்கள், கணையத்தோடு நேரடி தொடர்புடையதாக இருக்கின்றன.

ஆனால், இந்தியாவில் இதற்கு நேர்மாறாக 80% பாதிப்புகள் ஆம்புலரி புற்றுநோயாக தோன்றி கணையத்திற்கு பரவுகின்றன. இத்தகைய போக்கு இந்தியா முழுவதிலும் காணப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக ஆம்புலரி கணைய புற்றுநோயில் சிகிச்சைக்குப் பிறகு உயிர்பிழைக்கும் விகிதம், கணைய புற்றுநோயோடு ஒப்பிடுகையில் அதிகமாகவே இருக்கிறது.

கணைய புற்றுநோயில் இது 5-10% இருக்கும் நிலையில் ஆம்புலரி கணைய புற்றுநோயில் 50%-க்கும் அதிகமாக உயிர்பிழைப்பு விகிதம் காணப்படுகிறது,” என்றார்.

இந்நிகழ்வில், குடல் இரைப்பை அறுவைசிகிச்சை துறை முதுநிலை நிபுணர் மோகன்,புற்றுநோய் துறையின் தலைவர் டாக்டர் கிருஷ்ண குமார் ரத்தினம்,குடல் இரைப்பை அறுவை சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் அழகம்மை உட்பட மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top