கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் 2ஆம் ஆண்டு மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் இலங்கைத் தமிழர்கள் முகாமைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் தனி ஈழம் வேண்டி போராடி உயிர் நீத்த மாவீரர்களைப் பற்றிய பேச்சு கவிதை உள்ளிட்டவைகளை மேடையில் நிகழ்த்தி காட்டினர்
மேலும் தனி ஈழம் அமைக்க வலியுறுத்தி உயிர் நீத்தவர்களின் புகைப்படங்களின் முன்பு கண்ணீர் மல்க நினைவுகளை பகிர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கல்லறை முன்பு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.