திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன் முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கினார்.
திருவண்ணாமலை கிரேஸ் மருத்துவமனையில் உள்ள முதியோர் இல்லத்தில் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட அமைப்பாளர் கணேஷ் தலைமை வகித்தார்.
மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் நவீன் குமார் அனைவரையும் வரவேற்றார். விழாவில் கழக மருத்துவரணி மாநில துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் , கலந்து கொண்டு முதியோர்களுக்கு இனிப்பு மற்றும் அறுசுவை உணவுகளை வழங்கினார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், மாவட்ட அமைப்பாளர் நேரு, மாமன்ற உறுப்பினர்கள், அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போளூர்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு போளூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகளை மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் எ.வ.வே.கம்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சீருடைகள் மற்றும் நல திட்ட உதவிகளை வழங்கி கௌரவித்தார்.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஆரணி சாலையில் உள்ள பேருந்து நிலையம் அருகில் சேத்துப்பட்டு நகர திமுக சார்பில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது . நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுதா முருகன் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கி கழகக் கொடி ஏற்றி வைத்து விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் நல திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன் ,போளூர் நகர செயலாளர் தனசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டுரங்கன், திமுக ஒன்றிய செயலாளர், அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ,கழக முன்னோடிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.