திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் ராமகிருஷ்ணா பேட்டையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்று வடக்கு மாவட்ட பொது செயலராகதீபக் என்பவரை நியமித்து அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சென்னையில் புயல், மழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும். மெக்கா, மதீனா யாத்திரைகளுக்கு தமிழக அரசு நிதி வழங்குவது போல, இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் மாவட்டத்துக்கு 2 ஆயிரம் ஐயப்ப பக்தா்களுக்கு யாத்திரை நிதியுதவி வழங்க வேண்டும்.
சபரிமலையில் கா்நாடக பவன், ஆந்திர பவன் உள்ளதைப் போல, தமிழ்நாடு பவன் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் கையொப்ப இயக்கத்தை தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் 2026-இல் பாஜக தலைமையில் ஆட்சி அமையும்.
ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் .இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பா ரஞ்சித்தின் நீளம் பண்பாட்டு மையத்தை தடை செய்ய வேண்டும்.
சபரிமலையில் மிகவும் புனிதமான 18 படி அவமரியாதை செய்த செயல் கண்டிக்கத்தக்கது என கூறினார்.
இதில், மாநில இளைஞரணித் தலைவா் கண்ணன், செயலா் கே.வி.மணிவண்ணன், மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் ,மீனவரணி தலைவா் ஜெயக்குமாா் , இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிடோா் கலந்துகொண்டனா் .