Close
ஏப்ரல் 2, 2025 9:12 காலை

காஞ்சிபுரத்தில் மாநகர, கிராமப்புற செவிலியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள்

4000 காலி பணியிடங்களில் நிரப்புதல், மத்திய மாநில அரசுகள் வழங்கிய தாய் சேய் நல கண்காணிப்பு செயலிகளை பதிவு செய்ய ஊழியர்களின் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆரம்ப சுகாதார ஊழியர்கள் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்கள்.

தமிழ்நாடு அரசு மாநகர மற்றும் கிராமப் பகுதி சுகாதார பெண் செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பெரும்பிரல் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்த மாநில தலைமை அறிவுறுத்தியது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பவானி தலைமையில் காஞ்சிபுரம் காவலன் கேட்ட அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் கற்பகம் மாநில பொதுச் செயலாளர் சுமதி உள்ளிட்டூர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்ப அனைவரும் எழுப்பினர்.

காஞ்சிபுரம் மாவட்ட மாநகர மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மாவட்ட தலைவர் பவானி

ஆர்ப்பாட்டம் குறித்து கூறுகையில் பொது சுகாதார துறையில் கர்ப்பிணி பெண்களை கண்காணிக்க செயல்படும் தமிழக அரசின் பிக்மி மற்றும் தற்போது மத்திய அரசு செயல்படுத்தும் யு வின் ஆகியவற்றில் பதிவு செய்ய பெரும் சவாலாக உள்ளதால் 24 மணி நேரமும் செயல்பட வேண்டி உள்ளது.

இதற்காக தனியாக ஆபரேட்டர் நியமிக்க வேண்டும், 4000 காலி பணியிடங்களை செவிலியர் பயிற்சி முடித்த நபர்களை பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top