திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டதை தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் பற்றி எடுத்துக்கூறினர். மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் மிக மோசமான நிலையில் இருப்பதாக சில மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள மழை நீர் வடிகால்களை தூர்வாரப்படாமல் இருப்பதால் மழை காலங்களில் தண்ணீர் முறையாக வடியாமல் இருப்பதாக கூறி வடிகால் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினார்கள்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் பாலு, நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், ,துர்கா தேவி, ஜெய நிர்மலா ,விஜயலட்சுமி கண்ணன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவிபொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.