Close
டிசம்பர் 5, 2024 2:28 காலை

சுங்கச்சாவடியை தவிர்க்க திருமங்கலம் விமானநிலைய சாலையை பயன்படுத்தும் கனரக வாகனங்கள்..!

சுங்குராம்பட்டியை அடுத்துள்ள புளியங்குளம் விலக்கில் கண்காணிப்பு பணியில் போக் குவரத்துக் காவல் துறையினர்

திருமங்கலம் விமானநிலைய சாலையில், சுங்குராம்பட்டியை அடுத்துள்ள புளியங்குளம் விலக்கில் கண்காணிப்பு பணியில் போக்குவரத்துக் காவல் துறையினர்.

மதுரை:

மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியை தவிர்த்து கட்டணம் இல்லாமல் செல்வதற்காக கனரக வாகனங்கள் இந்தப் பாதையை பயன்படுத்திக் வருகின்றனர். இப்பொழுது திருமங்கலம் ரயில்வே மேம்பாலப்பணி நடைபெறுவதால் அச்சாலையும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது . கனரக வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்காக புளியங்குளம் விளக்கிற்கு போக்குவரத்து காவலர்களையும் நியமித்திருக்கிறார்கள்.

அப்பகுதி மிகவும் ஆபத்தான பகுதி என்பதால், அங்கே இரண்டு வேகத்தடை அமைத்தால் நன்றாக இருக்கும் .. மற்றும் நிரந்தர காவல் சோதனைச் சாவடி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மற்றும் காவல் துறையினருக்கு மழை வெயில் என, சிரமம் இல்லாமல் ஒரு நிழற்குடை அமைத்தால் நன்றாக இருக்கும் . பொதுமக்களும் அந்த நிழற்குடையை பயன்படுத்திக் கொள்வார்கள்; காவல்துறையினரும் அந்த நிழற்குடையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top