Close
மார்ச் 31, 2025 12:10 மணி

இன்று சோழவந்தானில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து முழு கடையடைப்பு..!

சோழவந்தானில் பூட்டப்பட்டிருக்கும் கடைகள். வெறிச்சோடி கிடக்கும் சாலை

சோழவந்தான்:

தமிழகத்தில் வர்த்தக நிறுவனங்களில் வாடகைக்கு இருப்பவர்களுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என மத்திய அரசின் உத்தரவை கண்டித்து பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு நடைபெற்றது.

சோழவந்தானில் அனைத்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நவம்பர் 29ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமாக கடையடைப்பு நடத்தப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து இன்று சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து வியாபார நிறுவனங்களும் காலை ஆறு மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவிப்பது என முடிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் சோழவந்தானில் உள்ள 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அனைத்து வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ஜவகர் செயலாளர் ஆதி பெருமாள் பொருளாளர் கேசவன் ஆகியோர் கூறுகையில்,

எங்களின் கோரிக்கையை ஏற்று கடை அடைப்பு நடத்திய அனைத்து வணிக நிறுவன உரிமையாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் இதுகுறித்து வணிக நிறுவனங்களில் உள்ள வாடகைதாரர்களுக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு வியாபாரிகள் சார்பாக கடும் எதிர்ப்பு இருப்பது தெரிகிறது.

ஆகையால் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கு இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்து செய்ய அழுத்தம் தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top