Close
டிசம்பர் 4, 2024 7:05 மணி

நாகூர் கந்தூரி விழாவிற்காக இயக்கப்பட உள்ள 100 சிறப்பு பேருந்துகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சார்பில் நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டம் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா 02.12.2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 11.12.2024 அன்று சந்தனக்கூடு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாகூர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வருகைதர உள்ளனர். அதனை முன்னிட்டு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்கவும், போக்குவரத்துத்துறை அமைச்சரின் வழிக்காட்டுதலின்படி நடைபெறவுள்ள கந்தூரி திருவிழாவை முன்னிட்டு 01.12.2024 முதல் 12.12.2024 வரை சென்னை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிதம்பரம், இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து நாகப்பட்டினம் – நாகூர் மற்றும் காரைக்கால் – நாகூர் வழித்தடத்திலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

மேலும், தற்காலிக வாகன நிறுத்தம் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திலிருந்து நாகப்பட்டினம் தொழிற்பயிற்சி நிலைய மைதானம் (ITI GROUND), MODEL SCHOOL வாகன நிறுத்தம், வெண்ணாற்றாங்கரை வாகன நிறுத்தம் மற்றும் இரயில் நிலையம் ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் வட்டப்பேருந்து இயக்கம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தினசரி இயக்கப்பட்டு வரும் 127 பேருந்துகள் வாயிலாக 335 நடைகளுடன் 02.12.2024 அன்றும், 11.12.2024 அன்றும் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை ஒருங்கிணைக்க நாகூர் மற்றும் நாகப்பட்டினம் பேருந்து நிலையங்களில் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இச்சிறப்பு பேருந்து சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top