Close
டிசம்பர் 4, 2024 8:30 காலை

திருவண்ணாமலையில் இன்று குபேர லிங்க சன்னதியில் குவிந்த பக்தர்கள்

குபேர லிங்க சன்னதியி்ல் குவிந்துள்ள பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலம் உலக பிரசித்தம். லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ மலையை அண்ணாமலையாராக நினைத்து வலம் வருவார்கள். பௌர்ணமி மட்டும்மல்லாமல் புதிய வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என பக்தர்கள் வலம் வருபவர். தற்போது வாரத்தில் ஏழு நாட்களும் பக்தர்கள் வலம் வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் என்ற வழக்கம் உள்ளது. கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளன்று குபேரன் பூமிக்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்கி கிரிவலம் வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சிவராத்திரி அந்த கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களில் ஏழாவது லிங்கமாக உள்ள, குபேரலிங்கத்தை வழிபடுவது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அதன்படி குபேரனுக்கு உகந்த தினமான இன்று மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை, குபேரலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நேரத்தில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் முடிந்து, பின்னர் கிரிவல மலையை வலம் வந்தனர்.

அதன்படி இன்றுஅதிகாலையில் உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் குபேர லிங்க கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றனர். மாலை 6 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. சுமாா் 1 முதல் 3 மணி நேரம் வரை பக்தா்கள் காத்திருந்து தரிசனம் செய்தனா். தற்போது சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டுள்ளனர்.

இரவு 7 மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு குபேரலிங்கத்தின் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். கிரிவலம் முடித்ததும் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும், பிறர் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக அவரவர் வீடு திரும்ப வேண்டும். கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம். தங்கி, மறு நாள் வேறு எங்கும் செல்லாமல் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம். அப்படி செய்தால் மட்டுமே குபேரகிரிவலத்தின் பலன் நமக்குக் கிடைக்கும் என்று பக்தர்களிடையே ஒரு நம்பிக்கையுடன் பேருந்து நிலையங்களில் இரவு நேரத்தில் தங்களது ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளை பிடிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

வரும் காலங்களில் குபேர கிரிவலம் நாள் அன்று கூடுதல் பேருந்துகளை மாவட்ட நிர்வாகம் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top