Close
டிசம்பர் 4, 2024 6:59 மணி

விளையாட்டு விடுதி மாணவியர்களுக்கு சாம்பியன் கிட் வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக   அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட விளையாட்டு விடுதி மாணவியர்களுக்கு சாம்பியன் கிட் களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் விளையாட்டு மேம்படுத்துவதற்காக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கல்வி பயில வேண்டும். அரசின் சார்பாக விளையாட்டு துறைக்கு செயல்படுத்தி வரும் திட்டங்களை பயன்படுத்தி விளையாட்டுத்துறையில் அனைவரும் முன்னேற வேண்டும் என ஆட்சியர் அறிவுரை வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை விளையாட்டு விடுதி மாணவியர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச், வாட்டர் பாட்டில், 3 டவல், தொப்பி, காயம் ஏற்பட்டால் முதலுதவி செய்வதற்கான கிட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சாம்பியன் கிட் களை 107 மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

மேலும் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை காண குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சப் ஜூனியர் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வெற்றி பெற்ற திருவண்ணாமலை மாவட்ட விடுதி மாணவியர்கள்  தங்கப்பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

இந்நிகழ்வில் மண்டல முதுநிலை அலுவலர் ஜான், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் சண்முகப்பிரியா, பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top