திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா சீருடைகள் தைப்பதற்கு அளவெடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
2025- 26 ஆம் ஆண்டுக்கான விவரப்படி பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா சீருடை தைப்பதற்கான அளவெடுத்தல் பணி 1.12.24 துவக்கப்பட்டு 31.1.25 தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் . கைத்தறி நிறுவனம் மூலம் ஜனவரி 2025 கடைசி வார முதல் சீருடை துணிகள் விநியோகம் செய்ய வேண்டும்.
சமூகநல தொழில் கூட்டுறவு சங்கங்கள் அளவெடுக்கும் பணிகளை முடித்த பின்னர் அளவு வாரியாக தைக்கும் பணியினை விரைந்து முடித்து 15.5.25 க்குள் அனைத்து கல்வி வட்டங்களுக்கும் இரண்டு இணை சீருடைகள் விநியோகம் செய்து முடிக்கப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடைகளை தரமாகவும் சரியான அளவில் அளவெடுத்து தைக்க வேண்டும் . தரமான பட்டங்களை பயன்படுத்த வேண்டும் என கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தி பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட சமூக நல அலுவலர் சரண்யா, தொழில் கூட்டுறவு அலுவலர் ஜெகதீசன், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தொழில் கூட சங்கப் பணியாளர்கள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.