Close
ஏப்ரல் 1, 2025 5:48 காலை

மதுரையில் அருள்நிதி நற்பணி மன்றம் சார்பில் உதயநிதி பிறந்தநாள் நலஉதவிகள் வழங்கல்..!

அருள்நிதி மன்றம் சார்பில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சத்துணவு கூட பணியாளர்களுக்கு புடவையும் வழங்கப்பட்டது.

சோழவந்தான் :

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் அருள்நிதி தலைமை நற்பணி மன்றம் சார்பாக, மேலக்குயில்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியில், பயிலும் மாணவ மாணவிகளுக்கு, மன்றத்தின் துணைத் தலைவர் எம்.பி. பாலா ஏற்பாட்டில், நோட்டு புக் மற்றும் எழுது பொருட்களும் சத்துணவு கூடத்தில் பணிபுரியும் மகளிர்களுக்கு சேலையும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றம் ஒன்றிய தலைவர் சிபி மற்றும் மாணவர் காங்கிரஸ் தலைவர் விஜயதீபன் விக்னேஷ் , மதுரை மாவட்ட அருள்நிதி நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top