Close
டிசம்பர் 5, 2024 2:38 காலை

உசிலம்பட்டியில் மஞ்சள் பைக்கு பரிசு..!

மஞ்சப்பைக்கு பரிசு வழங்கிய நகராட்சி நிர்வாகம்.

உசிலம்பட்டி :

மதுரை அருகே,உசிலம்பட்டி நகர் பகுதியில், நெகிழி பைக்கு மாறாக மஞ்சள் பை எடுத்து வந்து ருட்களை வாங்கி செல்லும் பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி நகராட்சி நிர்வாகத்தினர் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் கடந்த ஒரு மாத காலமாக உசிலம்பட்டி நகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வணிக வளாக கடைகளில் நகராட்சி அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தி டன் கணக்கில் நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தும், நெகிழி பைகள் விற்பனை செய்தவர்களிடம் சுமார் 1 லட்சம் வரை அபராதமும் விதித்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, உசிலம்பட்டி நகர் பகுதியில் நெகிழி பைகளை தவிர்த்து மஞ்சள் பையுடன்
வந்து பொருட்களை வாங்கிச் செல்லும் பொதுமக்களை கண்காணித்து, அவர்களில் சுமார் 20க்கும் மேற்பட்டோரை குலுக்கல் முறையில் தேர்வு செய்த நகராட்சி அலுவலர்கள் இன்று உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி நகர் மன்றத் தலைவர் சகுந்தலா முன்னிலையில் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

தொடர்ந்து, அவர்களுக்கு பாராட்டு சான்றுகளை வழங்கி, நெகிழி பயன்பாட்டை தடுக்க கோரியும், நெகிழி பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என, உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top