மஞ்சள் நீர் கால்வாய் பணிகள் நிறைவுறாததால் தொடர் மழை காரணமாக நீர் கால்வாய் நிரம்பி வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அச்சப்படுகின்றனர்..
காஞ்சிபுரம் மாநகரின் பிரதான பகுதிகள் வழியாக மஞ்சள் நீர் கால்வாய் செல்கிறது. இதில் மழைநீர் , கழிவுகள் என அனைத்தும் செல்லும் நிலையில் கனமழையில் கூட காஞ்சிபுரம் மாநகரில் நீர் தேங்காத நிலை ஏற்படும்.
இந்நிலையில் மஞ்சள் நீர் கால்வாய் மீது, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அதன் மீது சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் பருவ மழை காரணமாக கால்வாயை சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆனந்தா பேட்டை தெரு முதல் திருக்காளிமேடு வரை சுத்தம் செய்த நிலையில், அதன் பிறகு சுத்தம் செய்யும் பணி நிறுத்தப்பட்டதால் இன்று பெய்த கனமழை காரணமாக சாலையில் ஓடிய நீர் அனைத்தும் கால்வாயில் சென்றது.
ஏற்கனவே அந்த கால்வாய் வழியாக நகரில் பெய்த மழை காரணமாக இந்த நீரும் சேர்ந்ததால் தற்போது நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அதனை ஒட்டிய பல பகுதிகளில் நீர் உட்புகுந்து குடியிருப்பிற்குள் சென்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டில் புகுந்த நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.