Close
டிசம்பர் 5, 2024 2:20 காலை

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் கோப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்ததாவது;

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையொட்டி மாவட்ட நிர்வாகம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அதன்படி மாவட்டம் முழுவதும் மழையின் அளவினை கருத்தில் கொண்டு 56 இடங்கள் பாதிப்பு ஏற்படக்கூடிய இடமாக கண்டறியப்பட்டுள்ளது.

78 நிவாரண முகங்கள்
மேலும் 50 இடங்கள் மிதமான பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாகவும், 6 இடங்கள் குறைவான பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாகவும், கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் திருவண்ணாமலை வட்டத்தில் 6 நிவாரண முகாம்களும் ஆரணி, சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், தண்டராம்பட்டு, போளூர், கீழ்பெண்ணாத்தூர் ,கலசப்பாக்கம் ,செய்யாறு என மொத்தம் 78 நிவாரண முகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மீட்பு நடவடிக்கைகளுக்காக முதல் நிலை காப்பாளர்களாக 2262 நபர்களும் தன்னார்வலர்கள் 300 நபர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான மணல் மூட்டைகள், கட்டைகள், கேஸ் கட்டர் உள்ளிட்ட 1121 அவசரகால பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மழை அளவு பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் நிவாரண முகாம்கள் குடிநீர் மின்சாரம் போன்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

மேலும் மழையினால் பாதிக்கப்பட்டவர்கள் உதவிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தினை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளில் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கும் வகையில் தேவையான ஜெனரேட்டர்களை தயார் நிலையிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர்காக்கும் கருவிகள் மருந்துகள் , பாம்பு கடிக்கு எதிரான மாற்று மருந்துகள் போன்றவை தேவையான அளவு கையிருப்பில் உள்ளது.

ஏரிகள் மதகுகள் சரியாக உள்ளனவா என்பதை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலைகளில் மரங்கள் விழுந்தால் அதனை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள ஏரிகளின் நீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர்  மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top