அலங்காநல்லூர் அருகே திமுக வடக்கு மாவட்ட மாணவரணி சார்பாக ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அலங்காநல்லூர் :
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரி மற்றும் எர்ரம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் திமுக வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் எம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆதிசங்கர், மாவட்டத் துணை அமைப்பாளர்கள் முரளிதரன், கேசவன், ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தொடர்ந்து மாணவ, மாணவியருக்கு தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் வாளி, போர்வை, பிளாஸ்க், துண்டு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாலமேடு நகர செயலாளர் மனோகரவேல் பாண்டியன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வாவிடமருதூர் கார்த்திகேயன், பிரதாப், ஒன்றிய அணி அமைப்பாளர்கள் சந்தனகருப்பு, யோகேஷ், ராம்குமார், மற்றும் சின்னஊர்சேரி கிளைக் கழக நிர்வாகிகள் தியாகு, ஆனந்த், பாலமேடு பேரூராட்சி கவுன்சிலர் வீரபத்திரன் பொறியாளரணி ராகுல் பாலா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.