தமிழகத்தில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலை முதலே தற்போது வரை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முப்பது மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் 163 மில்லி மீட்டர் , உத்திரமேரூரில் 207 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 134 மில்லி மீட்டர், ஸ்ரீபெரும்புதூரில் 140 மில்லி மீட்டர், குன்றத்தூரில் 114 மில்லி மீட்டர் செம்பரம்பாக்கத்தில் 134மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 10 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 528 ஏரியில் 103 ஏரிகளும் முழு கொள்ளளவு எட்டியுள்ளது.
மேலும் தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள அனுமந்தண்டலம் மற்றும் மாகரல் அணைக்கட்டுகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி செய்யாற்றில் செல்கிறது.
இதேபோல் பாலாற்றில் நீரோடை இரு பக்கத்திலும் செல்வதால் குடிநீர் ஆதாரங்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பெரிதும் பயனுறுவர்.