Close
டிசம்பர் 4, 2024 7:35 மணி

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை மருத்துவ முகாம்கள் மூலம் பயன்பெற்ற 1741 பேர்

வேடல் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் மூதாட்டி ஒருவருக்கு காய்ச்சல் குறித்த பரிசோதனையை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மேற்கொண்டபோது.

ஃபென்ஜால் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் 51 இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 1741 பேர் பயன் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று காலை முதல் ஃபென்ஜால் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக கன மழை பெய்து வந்தது. குறிப்பாக காஞ்சிபுரம் உத்திரமேரூர் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் 150 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகியது.

இந்நிலையில் நேற்று புயல் கரையை கடந்தாலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பொழிவு இருக்கும் எனவும் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

தொடர் மழை காரணமாக இளம் சிறார் முதல் மூத்த குடிமக்கள் வரை மருத்துவ வசதி தேவைப்படும் நிலையில் அதனை கருத்தில் கொண்டு தமிழக முழுவதும் இன்று சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாக்களிலும் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் இன்று 51 சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

காஞ்சிபுரம் குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் உத்திரமேரூர் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் மருந்தாளுனர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாநகர நகர் நல மருத்துவமனை மருத்துவர்கள் என அனைவரும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர்.

சிறப்பு முகாமில் 718 ஆண்கள் 936 பெண்கள் 64 குழந்தைகள் இருவருக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் என மொத்தம் 1740க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் அளித்தனர்.

மழைக்காலம் என்பதால் குடிநீரைக் காய்ச்சி பருகவும், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை மருந்துகள் அளிக்கப்பட்டது.

இந்த மருத்துவ முகாம்கள் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top