காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய் அறுவைச்சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அமைந்துள்ளது அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்.இம்மருத்துவமனையின் கருத்தரங்கக் கூடத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தொடர் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது.
இயக்குநர் பிரசாத் பெனுமாடு கலந்து கொண்டு புற்றுநோய் அறுவைச் சிகிச்சையில் ஒளிர்வு வழிகாட்டியின் நவீன பங்களிப்பு என்ற தலைப்பில் பேசினார். மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சை மருத்துவர் டி.டி.பாலமுருகன் வரவேற்று பேசினார்.
அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் பிரசன்ன சீனிவாசராவ் மற்றும் புற்றுநோயியல் உயர்கல்வி மாணவர் டோரியன் ஆகிய இருவரும் அறுவை சிகிச்சையில் உள்ள முறைகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தனர் .மருத்துவ அலுவலர் சிவகாமி நன்றி கூறினார்.100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.