Close
டிசம்பர் 4, 2024 8:30 காலை

கார்த்திகை தீபத் திருவிழா: காவல் தெய்வ உற்சவம் தொடக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு  தொடங்கியது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை (டிச.4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொடியேற்றத்திற்கு முந்தைய மூன்று நாட்கள் காவல் தெய்வ உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கும். அதன்படி ஞாயிற்றுக்கிழமை  இரவு திருவண்ணாமலை சின்னக் கடைத் தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

காவல் தெய்வமான துர்க்கை அம்மனுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நேற்று இரவு  துர்க்கை அம்மன் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் கன மழையிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று ஸ்ரீபிடாரியம்மன் வழிபாடு:

அருணாசலேஸ்வரர் கோவில் 3 ஆம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி புதன்கிழமை ன்று இரவு நடைபெறும்.

நாளை ஸ்ரீவிநாயகா் வழிபாடு:

காவல் தெய்வங்களின் 3-ஆவது நாள் வழிபாடு செவ்வாய்க்கிழமை (டிச.3) இரவு அருணாசலேஸ்வரா் கோயில் ஸ்ரீசம்பந்த விநாயகா் சந்நிதியில் நடைபெறுகிறது. உற்சவா் ஸ்ரீவிநாயகா் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

தீபத் திருவிழா கொடியேற்றம்:

காவல் தெய்வங்களின் வழிபாடு செவ்வாய்க்கிழமை (டிச.3) இரவுடன் நிறைவு பெறுகிறது. இதன்பிறகு, டிசம்பா் 4-ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் காலை 7.25 மணிக்குள் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன நாளான 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும்.

மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள, ஆண்டுக்கு 5 நிமிடம் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்த பின்பு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுவினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

சிறப்பு அலங்காரத்தில் துா்க்கையம்மன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top