மதுரை :
மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரி அருகே உள்ள உலக சமாதான ஆலயத்தில், குருபிரான் ஞானவள்ளல் பரஞ்சோதி மகானின் 113 வது ஞானோதய தினவிழா மற்றும் சிறப்புக் கூட்டு தியானம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மதுரை இலக்கிய மன்றத்தின் ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் குறித்து சிறப்பு கவியரங்கம் நடந்தது. விழாவில், சிறப்பு விருந்தினராக பாலமேடு உலக சமாதான ஆலமரத்தின் குரு பதவியாளர் மெய் காயும்கான், திருச்சி உலக சமாதான ஆலய குரு பதவியாளர் மெய் பரஞ்ஜோதி கொளஞ்சிநாதன், மதுரை இலக்கிய மன்ற நிறுவனர் அவனி மாடசாமி மற்றும் மதுரை உலக சமாதான ஆலய நிர்வாகத் தலைவர் வேல் சங்கர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மேலும், கூட்டு தியானம் சிறப்பாக நடைபெற்றது. இதில், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.