Close
டிசம்பர் 4, 2024 8:46 காலை

வாடிப்பட்டி தவெக கூட்டத்திற்கு ஆபத்தை உணராமல் சென்ற தொண்டர்கள்..!

ஆபத்தை உணராமல் கூட்டமாக நெரிசலில் பயணிக்கும் தவெக தொண்டர்கள்

சோழவந்தான் :

தமிழக வெற்றி கழகம் சார்பில் வாடிப்பட்டியில் பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பாலமேடு ஆகிய பகுதிகளில் இருந்து தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். சோழவந்தான் பகுதியில் இருந்து வந்த தொண்டர்கள் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஒன்று கூடி அங்கிருந்து புறப்பட்டு பொதுக்கூட்டத்திற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆபத்தை உணராமல் கூட்டமாக நெரிசலில் பயணிக்கும் தவெக தொண்டர்கள்

இந்த நிலையில் சிறிய டெம்போ வேன் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் தொண்டர்கள் ஆபத்தை உணராமல் கூட்டத்திற்கு சென்றனர். குறிப்பாக ஒரு வண்டியில் 20 பேர் மட்டுமே செல்லக்கூடிய நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் அடைத்துக் கொண்டு சென்றது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்தது.

சிறிய விபத்து ஏற்பட்டாலும் பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்படும் நிலையில் கட்சி தலைமை இதுபோன்று தொண்டர்கள் வருவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது. அப்படி வருவபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கட்சி தலைமைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top